மாஜி அமைச்சர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

கோலார்: மாநில முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாசை, கடந்த 15 நாட்களுக்கு முன் மர்ம  கும்பல் ஒன்று கடத்தி சென்று, கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக கோலார்  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக பிரகாஷிடம் விசாரணை  நடத்தி விவரம் பெற்றனர். அதை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் கவிராஜ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்  கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் செல்போன் டவர் மூலம் குற்றவாளிகள்  இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த போலீசார், நேற்று முன்தினம் இரவு திடீர்  சோதனை நடத்தி கொடாதி கேட் அருகில் உல்லாஸ்ரெட்டி, லிதிக், மனோஜ் ஆகிய  மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள்  தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஒத்துழைப்பில் விரைவில் கைது  செய்யப்படுவர் என்று எஸ்பி கார்த்திக்ரெட்டி தெரிவித்தார்.

Related Stories:

>