×

மூன்று மாவட்டங்களில் அமைகிறது: உரங்கள் உற்பத்தி செய்ய சாணம் சேகரிக்கும் மையங்கள்: அமைச்சர் தகவல்

கொப்பள்:  கொப்பள் நகரில் இயற்கை உரம் பயன்படுத்தி பயிர் செய்யும் விவசாயிகளை அமைச்சர் பி.சி.பாட்டீல் சந்தித்து பேசினார்.  ‘‘விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் விவசாயிகள் நலனை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விரைவில் விவசாயிகளுக்காக வேளாண் ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். நீர்ப்பாசன சங்கம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய தனி ஆணையம் ஆகியவை அமைக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளோம். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் ரசாயன உரங்களை நம்பி பயிர் செய்யாமல், தாங்களே உற்பத்தி செய்யும் இயற்கை உரங்களை பயன்டுத்த முயற்சிக்க வேண்டும். இதற்கான தரிசு நிலங்களில்  பயிர்கள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தேவையான நிதியுதவியை வழங்க அரசு தயாராக உள்ளது. மேலும் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் வகையில் பசு கோமியம் மற்றும் சாணங்களை சேகரிக்கும் மையங்கள் விரைவில் மூன்று மாவட்டங்களில் அமைக்கப்படும்’’ என்றார்.

Tags : districts ,collection centers ,Dung , Minister, Information
× RELATED 22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு