பந்துவீச்சு தரவரிசையில் பூம்ராவை முந்தினார் அஷ்வின்

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 விக்கெட் அள்ளியதன் மூலம் இந்திய சுழல் நட்சத்திரம் அஷ்வின், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சக வீரர் பூம்ராவை முந்தினார். அடிலெய்டில் நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஸிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா நிகழ்த்திய ஜாலங்களை மறக்க முடியாது. இரண்டு இன்னிங்சிலும்  சேர்த்து 5 விக்கெட் வீழ்த்திய  அஷ்வின், பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார். ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், பூம்ரா 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார். அவர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டருடன் 10வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Stories:

>