×

கேரளாவில் சிறப்பு சட்டசபை நாளை கூடுகிறது

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து டெல்லியில் 26 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லி உள்பட சில மாநிலங்கள் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இந்த நிலையில் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாளை (23ம் ேததி) கேரள சட்டசபை கூடுகிறது. 1 மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட முக்கிய தலைவர்கள் மட்டுமே பேசுவர். பின்னர் ேவளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து மசோதா நிறைவேற்றப்படும். இதற்கிடையே கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சட்டசபை கூட்டத்தை கூட்ட கவர்னரிடம் சிபாரிசு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : assembly ,Kerala , There is opposition across the country to the 3 agrarian amendment laws brought by the central government.
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...