இந்திய அணிக்கு உதவ டிராவிடை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும்: திலீப் வெங்சர்கார் வலியுறுத்தல்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு உதவ ராகுல் டிராவிடை அனுப்ப இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கிரிக்கெட் வாரியத்த்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி வீரர்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ டிராவிடை ஆஸ்திரேலியாவுக்கு வெகு விரைவில் அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலிய சுழலில் நகர்ந்து வரும் பந்தை எப்படி விளையாடுவது என்பது குறித்த புரிதலை பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்து, சிறப்பாக வழிநடத்த அவரால் மட்டுமே முடியும். அதோடு அவரது வருகை வலைபயிற்சியின்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.

கடந்த ஒன்பது மாதங்களாக கோவிட் காரணமாக என்.சி.ஏ மூடப்பட்டுள்ளது. இந்தியாவில்,  அவர் அணி வீரர்களுக்கு பெரியளவில் பயிற்சி அளிக்க வில்லை. டிராவிட் தற்போது பெங்களூரில் உள்ள பி.சி.சி.ஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) தலைவராக பணியாற்றி வருகிறார். 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் என்பதை பொருட்படுத்தாமல் பி.சி.சி.ஐ டிராவிட்டை அனுப்ப வேண்டும் என அவர் கூறினார். தற்போது டிராவிட் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>