அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம்: சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேச்சால் பரபரப்பு

சாத்தூர்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என்று சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்; இந்த கருத்தை கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக தோற்றதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே காரணம் என்று ராஜவர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவை குட்டிச்சுவர் ஆக்கியது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என்றும் கடுமையாக விமர்சித்துள்ள ராஜவர்மன் வரும் தேர்தலில் இந்த தொகுதியில் நின்றாலும் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தவர் ராஜவர்மன் ஆவர். அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ தன்னிடம் உள்ளதாகவும் ராஜவர்மன் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகரில் அமைச்சருக்கும் அதே கட்சியை சேர்ந்த எம்எல்ஏவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>