×

கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

வால்பாறை:  வால்பாறை கூழாங்கல் ஆற்றில் உள்ள பாறை குழியில் ராட்சத கற்கள் நிரப்பிய பின்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்கின்றனர்.
வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் வால்பாறை பகுதியில் அங்காங்கே ஓடும் ஆறுகளை பார்த்ததும் உடனே இறங்கி குளிக்க சென்று விடுகின்றனர். ஓடைகள், சிற்றோடைகள் என எதையும் விட்டு வைப்பது கிடையாது. அனைத்து பகுதிகளும் பசுமையுடன் காணப்படுவதால் ஆபத்தை உணராமல் இறங்கி விடுகின்றனர். வால்பாறை பகுதியை பொருத்தவரை அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது கூழாங்கல் ஆறுதான். கூழாங்கல் ஆறு வால்பாறையில் இருந்து சிறுகுன்றா, சிங்கோனா எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.

இந்த ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு ஒரு பகுதியில் மட்டும் அனுமதி உண்டு. மற்றோரு பகுதியில் குளிக்க அனுமதி இல்லை. அதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இளைஞர்கள் விதிமீறி குளித்து பாறை குழியில் சிக்கி பலியாகி வந்தனர். உயிர்பலியை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து, கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை நகராட்சி மூலம் கூழாங்கல் ஆற்றில் உயிர் பலி ஏற்படுத்தி வந்த பாறைக்குழியை ராட்சத கற்கள் கொண்டு நிரப்பும் பணி  துவங்கியது.  பணிகள் முடிந்த நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த ஆற்றுப்பகுதியில், தற்போது  குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் ஆற்றில் இறங்கி விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Tags : Pebble River , Tourists enjoy bathing in the Pebble River
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை