18ம் கால்வாய் நீர்வரத்தால் நிரம்பிய கண்மாய்கள்: தேவாரம் பகுதியில் நிலத்தடி நீர் உயர்வு

தேவாரம்: பதினெட்டாம் கால்வாய் நீர்வரத்தால், தேவாரம் பகுதியில் கண்மாய்கள் நிறைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.தேவாரம் பகுதியில் சின்னதேவியம்மன், பெரியதேவியம்மன் கண்மாய்கள் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உள்ளன.கடந்த மாதம் 18ம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தொடர் மழையாலும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

பல இடங்களில் கண்மாய், குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், தேவாரம் பேரூராட்சியிலும், அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னந்தோப்புகள் மற்றும் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘18ம் கால்வாய் தண்ணீரால் நிலத்தடி நீர் உயர்ந்து கண்மாய், குளங்கள் நிறைந்துள்ளன. இதனால், விவசாயத்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது’ என்றனர்.

Related Stories: