×

உறை பனி பொழிவு அதிகரிப்பு செடி கொடிகள் கருகும் அபாயம்: காட்டு தீ அபாயம்

ஊட்டி: ஊட்டியில் உறைபனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இம்முறை கடந்த மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கியது. இருப்பினும், நிவர் மற்றும் புரெவி ஆகிய புயல்களின் தாக்கம் காரணமாக பனி பொழிவு முற்றிலும் குறைந்தது. மேலும் இம்மாதம் முதல்வாரம் வரை மழையின் தாக்கம் நீடித்தது.இந்நிலையில் மழை குறைந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு நிலவி வந்தது. இரு நாட்கள் லேசான நீர்பனிப்பொழிவு துவங்கிய நிலையில், கடந்த வாரம் உறை பனி பொழிவு காணப்பட்டது.

அதன்பின் சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்த நிலையில் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் உறை பனி பொழிவின் தாக்கம் துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் உறை பனி படிந்திருந்தது. இதுதவிர சூட்டிங்மட்டம், கோரக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறை பனி பொழிவின் தாக்கம் காணப்பட்டது. ஊட்டியில் சாலைேயாரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது உறைப்பனி கொட்டி கிடந்தது. பனி பொழிவு காரணமாக ஊட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடும் குளிர் காணப்படுகிறது.

ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. உறைபனி பொழிவு காரணமாக புல்வெளிகள், செடி கொடிகள் கருக துவங்கியுள்ளன. வனப்பகுதிகளிலும் செடிகள் கருக துவங்கியுள்ளதால் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதனை தடுக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Increase in envelope snowfall Risk of plant vines wilting: Wildfire risk
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...