×

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு நீங்க முதலையா மாறினால் எனக்கு தெரியாது : பிரேசில் அதிபர் சர்ச்சை பேச்சு

பிரேசிலியா, :பிரேசில் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டின் நகரம் ஒன்றில் ெகாரோனா நோய்த்தடுப்பு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில், ‘பிரேசில் நாட்டிற்கு தடுப்பூசி வாங்க 20 பில்லியன் ரைஸை (3.9 பில்லியன் டாலர்) ஒத்துக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று பைசர் நிறுவன ஒப்பந்தம் தெரிவிக்கிறது.

அந்த தடுப்பூசியால் நீங்கள் தனித்துவ மனிதராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால், அல்லது ஒரு ஆண் ஒரு பெண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்னை.

இது பெரும் பின்விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தடுப்பூசியானது அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். ஆனால்  கட்டாயமில்லை, நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன். கொரோனாவில் இருந்த மீண்ட எனக்கு எதிர்ப்புசக்தி உள்ளது. எனவே நான்  ஏன் தடுப்பூசி போட வேண்டும்?’ என்றார். கொரோனா தயாரிப்பு மருந்து உற்பத்தியாளர்களைச் சாடிய அதிபரின் பேச்சு, பிரேசில் மக்களிடையே பதற்றத்தையும், அவர் மீதான சர்ச்சையையும் அவநம்பிக்கையுமே ஏற்படுத்தியுள்ளது.



Tags : Brazilian , Corona, vaccine, Brazilian president, controversy, speech
× RELATED பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் –...