×

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா!: பிரிட்டனுடனான விமான போக்‍குவரத்தை உடனடியாக தடை செய்க...மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!!

டெல்லி: இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில், வளர்ச்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது முன்னாள் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் சவூதி அரேபியா, துருக்கி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டவை பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

மேலும் பிரிட்டன் உடனான தரைவழி எல்லையையும் மூடிவிட்டன. இதுபோன்ற எந்த முடிவும் இந்தியாவில் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் சில மாறுபட்ட குணங்களுடன், கொரோனா வைரஸ் பரவி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : government ,Kejriwal ,UK , Britain, air traffic, ban, Kejriwal
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...