×

குதிரை பந்தயமும், ஆன்லைன் ரம்மியும் ஒன்றாக கருத முடியாது..!! தடைக்கு எதிரான வழக்கில் ஜன.18-ல் இறுதி விசாரணை; சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்தத வழக்குகளில் ஜன.18-ல் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  குதிரை பந்தயமும் ஆன்லைன் ரம்மியும் ஒன்றல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுளை அரசு தடை செய்துள்ளதால், இனி வரும் காலங்களில் அவற்றை விளையாடுவோரும், நடத்துவோரும் அபராதத்திற்கும், சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ள தமிழக அரசு இந்த விளையாட்டை விளையாட பயன்படுத்தும் கணினிகளும், செல்லிடபேசிகளும் மற்றும் பிற சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தது. மேலும், இந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குதிரை பந்தயமும் ஆன்லைன் ரம்மியும் ஒன்றல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்தத வழக்குகளில் ஜன.18-ல் இறுதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது என்று கேம்ஸ்கிராப்ட் நிறுவனம் வாதம் தெரிவித்தது.


Tags : hearing ,Chennai High Court , Horse racing and online rummy cannot be considered together .. !! Final hearing on Jan. 18 in case against ban; Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...