உத்திரப்பிரதேசத்தில் பட்டப்பகலில் நிலத்தரகர் சுட்டுக்கொலை.: பரபரப்பான சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்

ஆக்ரா: உத்திரப்பிரதேசத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நிலத்தரகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஷ் வாஜூர் என்ற  நிலத்தரகரை சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவர். ஆக்ரா சாலையை கடக்க ஹரிஷ் வாஜூர் நின்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொண்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஹரிஷ் வாஜூர் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு ஆக்ராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆக்ரா போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஹரிஷ் வாஜூர் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் துப்பாக்கி கலாச்சாரம் இந்தியாவில் பரவி வருவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories:

>