397 ஆண்டுகளுக்கு பின் வியாழன், சனி கோள்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு : மாலை சுமார் 5.45 மணிக்கு வெறும் கண்களால் பார்க்கலாம்!!

கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் இன்று வானில் அரிய நிகழ்வாக `கோ ஜங்ஷன் எனப்படும் பூமி, வியாழன், சனி ஆகிய 3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன.  கடந்த அக்டோபர் மாதமே இந்த நிகழ்வு வானில் தொடங்கி உள்ளது. இதன் உச்சபட்சமாக இன்று இந்த மூன்று கோள்களும் நேர்கோட்டில் வருகின்றன.அப்போது வியாழன் (Jupiter) கோள் பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சனி (Saturn) கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் அமைந்திருக்கும்.இதேபோன்ற நிகழ்வு கடந்த 1623ல் நடந்துள்ளது.

ஏறக்குறைய 397ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இதனால் பருவநிலையில் மாற்றங்கள் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இது இரவு 5.45 மணிக்கு தெரியும். சூரியன் மறையும் மேற்கு திசையில் இந்த அரிய நிகழ்வுகளை வெறும் கண்களால் காணலாம். வெறும் கண்ணால் வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி அபூர்வ நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நிலையில் இந்த அரிய நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், இரட்டை கோள்கள் காட்சி டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இது சார்ந்து கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில், கார்ட்டூன் சனி மற்றும் வியாழன் கிரகம் ஒன்றுக்கு ஒன்று அருகாமையில் சந்தித்து ஹை-ஃபைசெய்துவிட்டு கடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த winter solstice-ஐ பார்த்துக் கொண்டிருக்கும் பூமி கிரகம் முழுவதுமாக “பனி மூடிய” ஒரு பந்துபோல் குதூகலிப்பதையும் இன்றைய கூகுள் டூடுலில் காணமுடிகிறது.

Related Stories: