பாஜக-வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்.: ரவீந்திரநாத் தாகூரை அவமதித்து விட்டதாக கண்டனம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை பாஜக அவமதித்து விட்டதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

இந்த விழாவிற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் ரவீந்திரநாத் தாகூர் படத்துக்கு மேலே அமித்ஷா படம் இருப்பதை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாணவர்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ரவீந்திரநாத் தாகூர் பிறந்த ஊரில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த மாநில அமைச்சர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தா செல்லும் போதெல்லாம் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவமதிக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>