×

இந்தியாவில் கட்டுமானம், விவசாயம் ஆகிய துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய சவுதி இளவரசர் திட்டம்..!!

ரியாத்: சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக இந்தியாவுடன் சிறந்த நட்புறவு பாராட்டி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கட்டுமானம், சுரங்கம், வாடிக்கையாளர் பொருளுற்பத்தி, விவசாயம் ஆகிய துறைகளில் சவுதி அரேபியா இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். அது தற்போது உறுதியாகியுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, பெட்ரோ கெமிக்கல்ஸ் என்னும் ரசாயனத் தயாரிப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை நம்பி உள்ளது. இருநாடுகளும் இணைந்து இந்தத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சவுதி அரேபிய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது சாதி கூறுகையில் பயங்கரவாதத்தை ஒடுக்குதல், அறிவுசார் வளங்களைப் பகிர்தல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் சவுதி அரேபியாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட தங்கள் நாட்டு இளவரசர் திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

Tags : prince ,Saudi ,India , Saudi prince plans to invest US $ 100 billion in construction and agriculture in India .. !!
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்