×

அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: சேலத்தில் முத்தரசன் பேட்டி

சேலம்: சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மத்திய பாஜ அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களை  திரும்ப பெறும் வரை டெல்லியிலும், தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும். தன்னை விவசாயி என கூறும் முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்திருந்தால், வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர், தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு, வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டங்களை ஆதரித்ததன் மூலம் வரும் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 90 தொகுதிகளில் பாஜ வெற்றியை தீர்மானிக்கும் என அதன் தலைவர் கூறி இருக்கிறார். அப்படியென்றால், பாஜ தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கட்டும். தமிழகத்தில் 2 ஆயிரம் மினிகிளினிக் திறக்கப்படுகிறது. இந்த மினி கிளினிக்குகள், மக்களை திசை திருப்பும் விளம்பர யுக்தி. இவ்வாறு முத்தரசன் கூறினார்.



Tags : AIADMK ,Mutharasan ,Salem ,interview , People will learn a lesson from AIADMK: Mutharasan interview in Salem
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்