மெஸ்ஸி 643! பீலே வாழ்த்து

பார்சிலோனா: பார்சிலோனா அணிக்காக தனது 643வது கோல் அடித்த கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த பிரேசில் நட்சத்திரம் பீலேவின் சாதனையை சமன் செய்தார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா - வேலன்சியா அணிகளிடையே நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. வேலன்சியா சார்பில் டயகாபி 29வது நிமிடத்திலும், கோம்ஸ் 69வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

பார்சிலோனா தரப்பில் மெஸ்ஸி (45’+4), அராஜோ (52வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல், பார்சிலோனா கிளப் அணிக்காக அவர் அடித்த 643வது கோலாகும். இதன் மூலமாக ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார். இந்த அணிக்காக அவர் தனது கோல் கணக்கை 2005ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டின் சான்டோஸ் கிளப் அணிக்காக 1956 முதல் 1974 வரை விளையாடிய பீலே 19 சீசனில் 643 கோல் அடித்து சாதனை படைத்திருந்தார். தனது சாதனையை சமன் செய்துள்ள மெஸ்ஸிக்கு, பீலே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: