×

16,000 கிராமங்கள், வார்டுகளில் மக்கள் கூட்டங்கள் மூலம் அதிமுகவை நிராகரிப்போம் பிரசாரம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: அதிமுகவை நிராகரிப்போம்” எனும் பிரச்சாரம் 10 நாட்கள் நடக்கும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 20ம் தேதி சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் “அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தேர்தல் பிரச்சாரத்தை பற்றி உரை ஆற்றினார். இந்த பிரச்சாரத்தில், 1,704 திமுக நிர்வாகிகள் டிசம்பர் 23ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு, மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16,000 மக்கள் கூட்டங்களை நடத்துவார்கள்.

இந்த கூட்டத்தில், கழக மாவட்ட, மாநகர செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும். இதில் மக்கள் விரோத அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசின் தோல்விகள் விளக்கப்படும். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தி, அதிமுகவிற்கு எதிரான மக்களின் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, திமுக தொண்டர்கள் கிராமங்கள், வார்டுகள் தோறும் வீடு வீடாக சென்று, அதிமுக விற்கு எதிரான குற்றப்பத்திரிகை குறித்து விளக்கம் அளித்து, 91710 91710 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து திமுகவில் இணையும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இக்குற்றப் பத்திரிகையைப் பதிவிறக்கம் செய்தவற்கான இணைப்பு 16,000 கிராமங்கள், வார்டுகளில் மக்கள் கூட்டங்கள் மூலம் அதிமுகவை நிராகரிப்போம் பிரசாரம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்ைன: அதிமுகவை நிராகரிப்போம்” எனும் பிரச்சாரம் 10 நாட்கள் நடக்கும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 20ம் தேதி சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் “அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தேர்தல் பிரச்சாரத்தை பற்றி உரை ஆற்றினார். இந்த பிரச்சாரத்தில், 1,704 திமுக நிர்வாகிகள் டிசம்பர் 23ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு, மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16,000 மக்கள் கூட்டங்களை நடத்துவார்கள்.

இந்த கூட்டத்தில், கழக மாவட்ட, மாநகர செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும். இதில் மக்கள் விரோத அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசின் தோல்விகள் விளக்கப்படும். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தி, அதிமுகவிற்கு எதிரான மக்களின் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, திமுக தொண்டர்கள் கிராமங்கள், வார்டுகள் தோறும் வீடு வீடாக சென்று, அதிமுக விற்கு எதிரான குற்றப்பத்திரிகை குறித்து விளக்கம் அளித்து, 91710 91710 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து திமுகவில் இணையும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இக்குற்றப் பத்திரிகையைப் பதிவிறக்கம் செய்தவற்கான இணைப்பு www.werejectadmk.com மாநிலம் முழுவதும் 16,000 கிராமங்கள், வார்டுகளை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அதிமுக அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள் www.werejectadmk.com என்ற இணைய தளம் வழியாக அதிமுகவை நிராகரிக்கலாம். மாநிலம் முழுவதும் 16,000 கிராமங்கள், வார்டுகளை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அதிமுக அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள் www.werejectadmk.com என்ற இணைய தளம் வழியாக அதிமுகவை நிராகரிக்கலாம்.

Tags : Campaign ,AIADMK ,meetings ,villages ,announcement ,Thuraimurugan , We will reject AIADMK through mass meetings in 16,000 villages and wards: Thuraimurugan announcement
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...