×

வாடகை பாக்கி உள்ளவர்களை டிச.31க்குள் அகற்றுவதில் விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகளால் கடும் சர்ச்சை: பொதுமக்கள், வாடகைதாரர்கள் கொந்தளிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளது. இக்கோயில்களுக்க சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் வாடகைதாரர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வாடகைதாரர்களுக்கு அளிக்கப்படவில்லை.

இது தொடர்பாக வாடகைதாரர்கள் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், வாடகை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், வாடகை பாக்கியை நீக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தனித்தனியாக சந்தித்து கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையின் பேரில் உரிய முடிவு எடுப்பதாக முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

இந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், திடீரென வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்ற வேண்டும் என்று கமிஷனர் அலுவலகம் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஒவ்வொரு கோயில் அலுவலர்களும் அவசர, அவசரமாக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அகற்ற வருவதற்கு முன்பு நோட்டீஸ் அளித்து குறைந்தது 30 முதல் 45 நாட்கள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.

ஆனால், இது போன்று எந்த வித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அவசர, அவசரமாக  வீடு, கடைகளை வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை அகற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எந்த வித நோட்டீஸ் தராத நிலையில் திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பாடியில் உள்ள 3 வீடுகளை அகற்ற உதவி ஆணையர் கவெனிதா, செயல் அலுவலர் குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதே போன்று மாநிலம் முழுவதும் உரிய கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட கோயில் மனையில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Tags : deportation ,landlords , Controversy erupts over deportation of landlords by Dec. 31
× RELATED விஜய் மல்லையாவை நாடு கடத்துவது...