மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை

காஞ்சிபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தல் 2021க்கு முன்னேற்பாடாக 620 வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தன. தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரத்துக்கு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 620 மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிச்சந்திரன், தேர்தல் வட்டாட்சியர் ரபீக், தனி வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், அதிமுக நிர்வாகி ரங்கநாதன், தேமுதிக நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் இருந்தனர்.

Related Stories:

>