தந்தைக்கு வீடியோ அனுப்பி இளம்பெண் திடீர் தற்கொலை

பூந்தமல்லி: திருவேற்காடு கஸ்தூரிபா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு கடந்த மாதம் 26ம் தேதி ரக்சனா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். இரவு ரக்சனா மாமியார் வசந்தா வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரக்சனா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரக்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், தற்கொலைக்கு முன்பு ரக்சனா, அவரது தந்தையின் செல்போனுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில், தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால் தற்போது இந்த விபரீத முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆவடி: ஆவடி அடுத்த கொள்ளுமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணி. ஆந்திரா விவசாயி. இவரது மனைவி செங்கம்மாள். இவர்களுக்கு மோனிஷா(16) என்ற மகள் இருந்தாள். இவள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கம்மாள் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் மோனிஷா மட்டும் தனியாக இருந்துள்ளாள். பின்னர், செங்கம்மாள் இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மோனிஷா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories:

>