வார இறுதி நாளில் மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்: சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினாவுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் வார இறுதி நாட்களான நேற்று மற்றும் நேற்று முன்தினம் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ெமரினா கடற்கரையில் குவிந்தனர். மாலை 6 மணி முதலே பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவியத் தொடங்கினர்.

இவர்கள் சர்வீஸ் சாலையில் கார் மற்றும் பைக்குகளை நிறுத்தி விட்டு ெசன்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து குழந்தைகள் அலையில் கால்களை நனைத்து விளையாடினர். ஆனால் கடற்கரைக்கு வந்த பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. அவர்களை கண்காணிக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.

Related Stories:

>