×

சுசீந்திரம் கோயிலில் மார்கழி திருவிழாவுக்கான மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி

சுசீந்திரம்: சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி,  பாரம்பரியமாக நடைபெறும் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை, சுசீந்திரம் கோயில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் 16 பிடாகைகள் (ஊர் பிரதிநிதிகள்) கலந்து கொண்டனர். அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் மற்றும் அழைப்பிதழ் வைத்து திருவிழாவை சிறப்பாக நடத்தி தரும்படி இணை ஆணையர் அன்புமணி அழைப்பு விடுத்தார். இதில் கோயில் மேலாளர் சண்முகம், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம், மதிமுக ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏராளமான பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர். மன்னர் காலத்தில் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரத்தை சுற்றி உள்ள மருங்கூர், நல்லூர், கற்காடு, காக்கமூர், சுசீந்திரம், ஆஸ்ரமம் உள்பட 16 கிராமங்களை சேர்ந்த ஊர் பிரதிநிதிகள் மற்றும் ஊர் மக்களை திருவிழாவுக்கு வந்து சிறப்பாக நடத்தி தரும்படி மஞ்சள் வைத்து அழைப்பார்கள். இந்த நிகழ்வு பாரம்பரியமாக இன்னும் நடைபெற்று வருகிறது.

Tags : presentation ceremony ,festival ,Suchindram temple , Yellow presentation ceremony for the Markazhi festival at Suchindram temple
× RELATED சித்திரை திருவிழா 7ம் நாள்;...