விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு..!

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் குறித்துக் கேள்விகள், விவாதங்கள் எழும் என்பதாலேயே மத்திய அரசு பார்லிமெண்ட் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த விருப்பமில்லாமல் ரத்து செய்துள்ளது.

மேலும், கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி, புதிய பார்லி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.ஆயிரம் கோடி செலவிட வேண்டிய அவசியம என்ன இருக்கிறது? தற்போது இருக்கும் பார்லி கட்டடம் இன்னும் 50 முதல் 75 ஆண்டுகள்வரை தாங்கக்கூடிய நிலையில் வலுவாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள், தலைவர்களின் நினைவுகளை அழிக்க யாரும் நினைக்கவில்லை. ஆனால், புதிய பார்லி கட்டி தன்னுடைய தோற்றத்தைப் பெருமைப்படுத்திக் கொள்வது மிகை ஜனநாயகமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: