×

சேறும் சகதியுமான சாலை: அவதிப்படும் பொதுமக்கள்

காளையார்கோவில்: காளையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை சேறும் சகதியும்மாக உள்ளது. காளையார்கோவில் தாலுகா அலுவலகம் 43 பஞ்சாயத்து 360க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பெரிய பரப்பளவை கொண்ட தாலுகா அலுவலகமாக உள்ளது. காளையார்கோவில் கால்நடை மருத்துவமனை பின்புறம் கடந்த டிச. 2017ம் ஆண்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 2 கோடியே 69 லட்சத்து 79 ஒன்பதாயிரம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டு காடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வருகின்றது.

புதிதாக கட்டப்பட்ட தாலுகா கட்டிடம் மற்றும் இ.சேவை மைய கட்டிடம் தற்போது பெய்து வரும் மழைக்கு கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கசிவு ஏற்பட்டு வருகின்றது. மேலும் தாலுகா அலுவலகத்திற்கு மழை காலங்களில் நடந்து மற்றும் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தாலுகா அலுவலகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் வைப்பதற்கும் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் பாதிஅளவு மண்ணால் மூடப்பட்டு மிதம் பல்லமாக உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீரால் மூழ்கப்பட்ட குழிகள் வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு தெரியாமல் குழிகளுக்குள் அடிக்கடி விழுந்து வரும் சம்பவம் அடிக்கடிநடந்து வருகின்றது. பொதுமக்களுக்காக பெறும் பொருட்செலவில் கட்டப்பட்ட தாலுகா கட்டிடம் தரமற்று இருப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். சமூக ஆர்வலர் டி.என்.கருனாநிதி கூறுகையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட தாலுகா கட்டிடத்திற்கு செல்வதற்கு பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.

மழை நேரங்களில் சேறும் சகதியாகவும் வெயில் காலங்களில் பள்ளம் மேடாகவும் உள்ளது. இதனால் முதியோர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு அச்சப்படுகின்றார்கள். மேலும் தற்போது கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் தற்போது மழைக்கே முழுவதும் மழை தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. புது கட்டிடத்தை சுற்றிலும் பேன்டேஜ் ஒர்க் அவ்வப்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றது. நீண்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த தாலுகா அலுவலகம். அதற்கான கட்டிடம் இவ்வாறு இருப்பது வருத்தம் அளிக்கின்றது என்று கூறினார்.


Tags : Dirt road ,civilians , Dirt road: Suffering civilians
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...