×

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர்: 484 ஆசிரியரல்லா பணிகள் உருவாக்கம்

நெல்லை: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசு ஆணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம், அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் தோற்றுவிக்க ஆண்டுக்கு ரூ.12.84 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் தற்போது அரசுப் பள்ளிகளில் 233 உபரி உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாகவும், 622 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் தேவை இருப்பதாகவும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எனவே 233 உபரி உதவியாளர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை 751 முதல் 1000 வரை உள்ள பள்ளிகளுக்கு பகிரிந்தளிக்க உத்தரவிடப்படுகிறது. இதன் மூலம் 389 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 484 பணியிடங்கள் அனுமதிக்கப்படும். இதற்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு 250 பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசுக்கு சரண்டர் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள

Tags : Surrender ,government schools ,Tamil Nadu , Surrender of 250 Graduate Teacher Vacancies in Government Schools Across Tamil Nadu: 484 Creation of Non-Teacher Jobs
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2...