மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு: சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் சண்முகம், வாசுகி,  குணசேகரன்,  கனகராஜ்,  மதுக்கூர் ராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி, சுகுமாறன், கண்ணன், சுகந்தி, தீபா, சாமுவேல்ராஜ் உள்ளனர். இக்குழு தமிழகம் முழுவதும் சென்று அனைத்து தரப்பினரிடம் பேசி பிரச்னைகளை அறிந்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள். தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பிரச்னைகள் குறித்து தங்களது கோரிக்கைகள், பிரச்னைகளை  cpimtn2009@gmail என்ற இமெயில் முகவரிக்கும்,  தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>