×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 2 லட்சம் நிதியுதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு 2 லட்சம் நிதியுதவியை திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை 5 கோடியே 17 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகவும் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : MK Stalin ,Artist Karunanidhi Foundation , MK Stalin donated Rs 2 lakh on behalf of the Artist Karunanidhi Foundation
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...