சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்தது

சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்றை தடுக்க சுகாதார துறையினர் காய்ச்சல் முகாம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தென்மேற்கு பருவமழையின் போதே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் புயல் முகாம்களிலும் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த காரணங்களால் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு பாதிப்பு பல மடங்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை 2,096 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதியானது. அதே சமயம் கடந்த ஆண்டு 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு டெங்கு கண்டுபிடிக்கப்பட்டது.  

சென்னையை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பல மடங்கு குறைந்துள்ளது. தென்ேமற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் 110 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதியானது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 153 பேருக்கும், நவம்பர் மாதம் 77 பேருக்கும், டிசம்பர் மாதம் 38 பேருக்கும் ெடங்கு கண்டறியப்பட்டது. இந்தாண்டு அக்டோபர் மாதம் 9 பேருக்கும், நவம்பர் மாதம் 4 பேருக்கும், டிசம்பர் வரை 5 பேருக்கும் டெங்கு தொற்று உறுதியானது.

Related Stories:

>