மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: கோவிட் -19 பாதிப்பை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசீயன்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரின் தேவை அதிகரித்த போது. அரசு மேற்படி பணியாளர்களை கான்டிராக்ட் அடிப்படையில் நியமித்தது. இந்த பணியாளர்களின் செயல்பாடு, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும், பரவலைத் தடுக்கவும் பயன்பட்டது. ஆனாலும் கான்டிட்ராக்ட் மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, கான்ட்ராக்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>