அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதன் நியமனம்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் விஸ்வநாதன். அவர் தற்போது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பி.விஸ்நாதனை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விஸ்வநாதன், கேரளா மாநில மேலிட பொறுப்பாளராக செயல்படுவார் என்று அறிவித்துள்ளார். கேரளா மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி விவகாரங்களை கவனிக்கவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories:

>