கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கல்குவாரி குத்தகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை பாயும்: செயல் அலுவலர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை கல்குவாரி குத்தகைக்கு விடக்கூடாது. இதை மீறி செயல்படும்  மீறினால் செயல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழக அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை:, அறநிலையத்துறை சார்பில் கடந்த 2008 ஜனவரி 29ம் தேதி தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ கோயில் நிலங்களை விற்பனை செய்வதையோ அல்லது நீண்ட கால குத்தகை வழங்குவதையோ தவிர்க்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் இதுவரை அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் எந்த ஒரு கோயில் மூலமும் கல்குவாரிக்கு குத்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் போது அதன் இயல்பு தன்மை கெட்டு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு ஏற்படும் என்பதால், கல்குவாரி குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கோரிக்கை வரப்பெற்றால் அதனை நிராகரிக்கப்பட வேண்டும். மேலும், இந்த அறிவிப்பினை பின்பற்றாமல் செயல்படும் சார்நிலை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.

Related Stories:

>