இந்தியாவில் இதுவரை 16 கோடி பரிசோதனை: பாதிப்பு: 1 கோடியே 4,599: உயிரிழப்பு: 1 லட்சத்து 45,136

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 16 கோடி பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி, குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* நேற்று ஒரே நாளில் 25,152 பேருக்கு புதிதாக தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.

* கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 10 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர்.

* கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் பலியானதால், இறப்பு எண்ணிக்கை 1,45,136 ஆக அதிகரித்துள்ளது.

* நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

* நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் இருந்து இதுவரையில் மொத்தம் 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் எண்ணிக்கை 95.50 லட்சத்தை கடந்தது.

Related Stories: