×

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடத்தில் 12 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடத்தில் 12 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்த தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளைமீது இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல ஆண்டு காலமாக தலிபான்களுக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதலை சமாளிக்க ஆப்கன் அரசு அமெரிக்காவின் உதவியை நாடியது. அவ்வப்போது அமெரிக்க ராணுவ தளவாடங்களை பயங்கரவாதிகள் தாக்கிவந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவ தலைவர் மார்க் மில்லே தோஹா நகரில் தாலிபான் தலைவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கத்தாரில் நடைபெற்ற உடன்படிக்கையின்படி ஆப்கன் ராணுவம் மற்றும் தாலிபான்கள் ஆகிய இருசாராருமே தாக்குதலை குறைத்துக் கொள்வதாக கூறினார். தற்போது அமெரிக்க தளவாடத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags : military base ,US ,Afghanistan , In Afghanistan, the U.S. military, logistics, 12 rockets, attack
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...