×

தில்லையாடி வழியாக சென்று நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தரங்கம்பாடி: தில்லையாடி வழியாக நாகை மற்றும் சிதம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தில்லையாடி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு  மற்றும் தனியார் பேருந்துகள் 8 மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நாகை - சிதம்பரம் இடையே சென்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகள்  மட்டும் இயக்கப்படாமல் உள்ளது.

தனியார் பஸ் இயக்கப்படாத நிலையில் அரசு பேருந்தை மட்டுமாவது உடனடியாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தில்லையாடி பொதுநலச்சங்க முன்னாள் செயலாளர் கலியபெருமாள் மாவட்ட  கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 8 மாதங்களுக்கு முன் கொரோனா தாக்கத்தால் அரசு ஊரடங்கை அறிவித்து அனைத்து பேருந்துகளும் நிறுத்தபட்டது. இப்போது அரசு அனுமதி அளித்து அனைத்து  வழித்தடத்திலும் பஸ்கள் சென்று வருகிறது. சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு இயக்கப்பட்டு வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இரண்டும் இன்று வரை ஓடவில்லை.

இதனால் தில்லையாடி பகுதியில் இருந்து நேரிடையாக நாகை மற்றும் சிதம்பரத்திற்கு செல்ல பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தனியார் பேருந்து இயங்காத நிலையில் அரசு பேருந்தை உடனடியாக இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. கோரிக்கை மனு அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளருக்கும், நாகை கோட்ட மேலாளருக்கும் மற்றும் சீர்காழி கிளை மேலாளருக்கும் அனுப்பபட்டுள்ளது.

Tags : Thillaiyadi , Government bus to stop via Thillaiyadi and run again: Public demand
× RELATED நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும்