×

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்: ஐஐடி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உரிமையை பறிப்பதா?

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் சென்னையில் நடந்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்தரராசன், வாசுகி, சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் விவரம்:  மத்திய அரசினால் அமைக்கப்பட்ட ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு, தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முறை அவசியமில்லை  எனவும், ஆசிரியர் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளது. இது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்து, உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைத்து வரும் கல்வி மற்றும்  வேலைவாய்ப்பை பறிக்கும் முயற்சியாகும். ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.

Tags : Government ,Central ,IITs , Marxist Condemnation of Central Government: Seizing Reservation Rights in IITs?
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...