×

சென்னை- சேலம் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செங்கம்:சென்னை முதல் சேலம் வரையில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க, 92 சதவீத விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே எதிர்க்கின்றனர்’ என்று அரியலூரில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி பேசியுள்ளார். முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் ஆணைமங்கலம் கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக முதல்வர் எடப்பாடியை கண்டித்து கோஷமிட்டனர். இதே போல் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்ள்  வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி முதல்வருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.



Tags : Chennai-Saleem Greenway , Protest against Chennai-Saleem Greenway: Farmers protest with black flag
× RELATED மதுரவாயல் பறக்கும் சாலை 2 அடுக்கு...