அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி அமைச்சர் கே.சி.வீரமணி காரை பொதுமக்கள் முற்றுகை: அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி அமைச்சரின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 10 இடங்களில் நேற்று மினி கிளினிக் தொடக்க விழா நடந்தது. இதில் அரக்கோணம் அருகே மோசூர் பகுதியில் உள்ள மினி  கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.  பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது, வழியில், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சரின் காரை திடீரென மறித்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர். அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் ெகாண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>