×

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  தமிழகத்தில் 2020-21ம் ஆண்டு நடக்க  உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரி வக்கீல் ஆனந்தபாபு தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும்  பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சில சாதிகள் சார்பில்தான் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற போராட்டங்களால் எதையும் அடைய முடியாது.

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும். சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசியல் சாசனத்தின்படி மனுதாரர் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Tags : Dismissal of case seeking caste wise survey
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...