×

இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்: 191ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: இந்தியா 62ரன் முன்னிலை

அடிலெய்டு: இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சு காரணமாக ரன் எடுக்க திணறிய ஆஸ்திரேலியா 191ரன்னில் சுருண்டது. அதனால் 2ம் நாள் முடிவில் இந்தியா 62ரன் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணி 89ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்து  விளையாடியது.   அஷ்வின் 15 ரன்னுடனும், விருத்திமான் 9 ரன்னுடனும்  களத்தில் இருந்தனர்.நாலு ஓவர் எல்லாம் ஓவர்அஷ்வின், விருத்திமான் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்த ஓவர்களில் கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த குல்தீப் யாதவ் 6ரன்னிலும்,  ஷமி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனால்  இந்திய அணியின் 2வது நாள் ஆட்டம் 23 நிமிடங்களில்  4.1ஓவரில் 4 விக்கெட்களை இழக்க, 11 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது.

 இந்தியா முதல் இன்னிங்சில் 93.1ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 244ரன் எடுத்தது. ஜஸ்பிரீத் பும்ரா 4*ரன்னுடன்  களத்தில் இருந்தார். ஆஸி தரப்பில் அசத்தலாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 3 விக்கெட்களை அள்ள,  ஹேசல்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.ஆரம்பம் உற்சாகம்... அடுத்தடுத்து சோகம் இந்திய அணியை குறைந்த ரன் வித்தியாசத்தில் சுருட்டிய உற்சாகத்தில் ஆஸி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  மேத்யூ வேடு, ஜோ பர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ரன் சேகரிப்பில்  சொதப்பினாலும், இந்தியா பந்து வீச்சில் அசத்தியது. முதல் 4 ஓவர்களை வீசிய உமேஷ் யாதவ், பும்ரா இருவரும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. ஆஸி அணி 5வது ஓவரில்தான் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கியது.  முதல் 10ஓவர்களில் 6ஓவர்கள் மெய்டன்கள்.

அதுமட்டுமல்ல 10ஓவர்களில் ஆஸி  12 ரன் எடுத்திருந்தது. கூடவே 15, 17வது ஓவர்களில் பும்ரா தொடக்க ஆட்டக்காரர்கள் மாத்யூ, ஜோபர்ன் ஆகியோர் தலா 8  ரன் எடுத்திருந்தபோது  எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார்கள். நெ.1 வீரர் ஒரு ரன்னில் காலி
ஆரம்பம் சோகமான கட்டத்தில் டெஸ்ட் போட்டியின் முதல்  நிலை ஆட்டக்காரர் ஸ்மித் களமிறங்கினார். சந்தித்த முதல் பந்தில்  ஒரு ரன் எடுத்தார். அதன் பிறகு மிகவும் கவனமாக விளையாடினார். எதிர்முனையில் லாபுஷேன் வேகம்  காட்டினாலும் ஸ்மித் அடக்கியே வசித்தார். ஆனால் அஷ்வின் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை ஆட முயன்றவர் ஆட்டமிழந்தார். அவர் 29பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்தார். அஷ்வின் சுழலில் ஆஸி வேகப் பந்து வீச்சாளர்கள் பும்ரா, உமேஷ், ஷமி ஆகியோர் அடுத்தடுத்து சிறப்பாக பந்து வீசினர். அதனால் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு 26வது ஓவரில் வாய்ப்பு கிடைத்தது.  ஆனாலும் வாய்ப்பு கிடைத்த முதல் ஓவரிலேயே ஸ்மித்தை  ஆட்டமிழக்க செய்தவர், தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களின் டிராவிஸ் ஹெட் 7,  அறிமுக வீரர் கேமாரன் கிரீன் 11 ரன்னில் ஆட்டமிழக்க செய்தார்.

அஷ்வின் சுழலில் சிக்கிய  ஆஸி அப்போது 40.3ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 79ரன்  எடுத்திருந்தது. கண்டம் தப்பியதால் கலக்கல் லாபுஷேன் 15வது ஓவரில் 2வது வீராக களமிறங்கினார். தான் சந்தித்த 3பந்தை ஸ்லிப் பக்கம் தூக்கி அடித்தார். அதனை விக்கெட் கீப்பரும், ஸ்லிப்பில் இருந்தவரும் கேட்ச் பிடிக்க முயன்று மோதி விழுந்ததுதான் மிச்சம். பந்து பவுண்டரிக்கு  பறந்தது. அப்போது கேட்ச்  பிடித்திருந்தால் பும்ராவுக்கு 3வது விக்கெட் கிடைத்திருக்கும். லாபுஷேனும் டக் அவுட்டாகி இருப்பார். அதேபோல் 18வது ஓவரில் ஷமி வீசிய பந்தை பும்ரா தவற விட்டபோது 15ரன்னிலும், பும்ரா வீசிய 23வது ஓவரில்   பந்தை பிரித்வி ஷா நழுவ விட்டபோது 21ரன்னிலும் இருந்தார் லாபுஷேன். அதனை பயன்படுத்தி  7பவுண்டரிகளுடன் 47ரன் எடுத்தவர்,  உமேஷ் பந்து வீச்சில் வெளியேறினார்.

கேப்டனுக்கு பொறுப்பு இருக்குபா ஆஸி வீரர்கள் பேட் கம்மின்ஸ்(0), மிட்செல் ஸ்டார்க்(15), நாதன் லயன்(10), ேஜாஷ் ஹேசல்வுட்(8) என அடுத்தது பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினாலும். கேப்டன் டிம் பெயின் மட்டும் பொறுப்பு உணர்ந்து விளையாடினார். அவர்  26ரன் எடுத்த போது ஒரு கண்டத்தில் இருந்து தப்பினார். பும்ரா பந்தை டிம் அடித்தபோது அதை மயாங்க் கேட்ச் பிடிக்காமல் விட்டுவிட்டார். அதனால் கடைசி வரை களத்தில் இருந்த அவர்  10பவுண்டரிகளுடன் 73ரன் விளாசினார். இந்திய  அணியிலும் அதிக ரன்(74) விளாசியவர் கேப்டன் கோஹ்லி தான். ஆஸியை சுருட்டிய  பவுலர்கள்இந்திய பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கும், சுழலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் ஆஸி 72.1ஓவரில்  எல்லா விக்கெட்களையும் பறிகொடுத்து 191ரன் எடுத்தது. அதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 53ரன் முன்னிலை பெற்றது. அபாரமாக பந்து  வீசிய  அஷ்வின் 4, உமேஷ் 3, பும்ரா 2 விக்கெட்களை அள்ளினர். விக்கெட் எடுக்காவிட்டாலும் ஷமி சிக்கனமாக பந்து வீசியிருந்தார்.

முன்னேறினார் பும்ரா இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா(4ரன்) வழக்கம் போல் வந்த ேவகத்தில் கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து  2வது வீரராக பும்ராவை களமிறக்கினார் கோஹ்லி.  பயிற்சி ஆட்டத்தில் கடைசியாக களமிறங்கி 55*ரன் விளாசியதால் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 6 ஓவருக்கு ஒரு விக்கெட் இழந்து 9ரன் எடுத்துள்ளது.  மயாங்க் 5ரன்னுடனும், பும்ரா ரன் எடுக்காமலும் களத்தில் இருக்கின்றனர். ஆட்டத்தின் 3ம் நாளான இன்று,  கைவசம் 9 விக்கெட்கள், 62ரன் முன்னிலையுடன்  இந்தியா 2வது இன்னிங்சை தொடரும்.

Tags : bowlers ,Indian ,Australia ,India , Indian bowlers rolled: 191 runs Australia: India lead by 62 runs
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...