×

சின்னமனூர் பகுதியில் முதல்போக நெல் அறுவடை திருவிழா

சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் சின்னமனூர், வேம்படிகளம், கருங்கட்டான்குளம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரில இருபோக நெல் விவசாயம் நடைபெறும். முதல்போக சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடவு பணியை துவக்கினர். தற்போது சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் அறுவடை துவங்கி நடந்து வருகிறது.

போதிய களம் வசதி இல்லாததால் மார்க்கையன்கோட்டை-குச்சனூர் மாநில நெடுஞ்சாலை, சின்னமனூர்-போடி நெடுஞ்சாலை, பாளையம்-தேனி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயல்களில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் பிரித்தெடுத்து வருகின்றனர். கடந்த 2 வாரமாக நெல் அறுவடை பணி நடந்து வருவதால் வெளியூர் வியாபாரிகளும் சின்னமனூர் பகுதியில் குவிந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 2 ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் விவசாயம் நடைபெறவில்லை. இந்தாண்டு அணையில் இருப்பதால் இரண்டாம் போகத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என நினைக்கிறோம். தற்போது முதல்போக அறுவடை பணி நடந்து வருகிறது. இரண்டாம் போகத்திற்கு நாற்றாங்காலில் நாற்று பாவி வருகிறோம்’ என்றனர்.


Tags : Paddy Harvest Festival ,Chinnamanur , First Paddy Harvest Festival in Chinnamanur
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி