×

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட் விரைவில் சந்தைக்கு வர உள்ளது : மத்திய அரசு அறிவிப்பு!!

டெல்லி : மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேதிக் பெயின்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துள்ளார். வேதிக் பெயின்ட் என்ற பெயரிலான இந்த பெயின்ட் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேதிக் பெயின்ட் உதவும் என கட்கரி கூறியிருக்கிறார்.

வேதிக் பெயின்ட் சிறப்பு அம்சங்கள்!!

*சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்ட மாட்டுச் சாணத்தில் இருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது.

*டிஸ்டம்பர், எமல்சன் ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியாக உள்ள இந்த பெயின்ட், சுவற்றில் அடித்தபின் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும்.

*சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, இந்த பெயின்டால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 55 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

Tags : announcement ,Federal Government , Cow dung, paint, federal, notice
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...