×

வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்ற பிஆர் பாண்டியன் உள்பட 500 பேர் கைது

ஆலந்தூர், : தமிழகஅனைத்து விவசாய சங்கங்க  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்களை  ரத்து செய்யக் கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக  சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகை போராட்டம்  நடத்தபோவதாக அறிவித்திருந்தனர்.  அதன்படி ஏராளமான விவசாயிகள்  ஆர்பாட்டத்தில் பங்கேற்க ஊர்வலமாக வந்தனர்.  அப்போது  அங்கிருந்த போலீசார்  விவசாயிகளை  சின்னமலை அருகே  தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து  விவசாயிகள் அங்கேயே போராட்டம் நடத்தினர்.  

இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, ததமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்  சங்க தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில்  ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசும்போது,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு  எந்த பாதிப்பும் இல்லை என  மத்திய அரசும்,  தமிழக முதல்வரும்  பேசிவருகிறார்கள்.   

இந்த சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்  என்ன என்பதை விளக்கும் விதமாக 11 கருத்துகளையும்,  9 தீர்மானங்ளையும்  கவர்னரிடம் அளிக்க உள்ளோம் என்றார். பின்னர் கருத்து மற்றும் தீர்மானங்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டார். ஆர்பாட்டம் முடிந்ததும்  அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில், ஆம்ஆத்மி கட்சி சார்பாக மாநில செயலாளர் சுதா,  மனித நேய ஜனநாயக் கட்சி சார்பாக நாச்சிகுளம் தாஹூதீன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : PR Pandian ,governor ,mansion , Agricultural Law, Bill, Repeal, House of Governors, PR Pandian, arrested
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...