தொடர் மழையால் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.: மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

குற்றாலம்: குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு கடந்த செவ்வாய் கிழமை முதல் குற்றால மெயின் அருவில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மெயில் அருவியில் தடுப்புகளை தண்டி தண்ணீர் கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவில் ஆர்வமுடன் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குற்றால அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட மூன்று நாட்களிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் நீர்வரத்து குறையும் பட்சத்தில் அருவில் குளிக்க தடை நீக்கப்பட்டு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>