திருவில்லிபுத்தூர் அருகே வனத்துறை அதிகாரி தோட்டத்தில் 350 கிலோ சந்தனக்கட்டை பதுக்கல்

திருவில்லிபுத்தூர்:  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில்  உள்ளது பந்தபாறை. இங்கு திருவில்லிபுத்தூரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு தோட்டம் உள்ளது. இவர் கோவை மாவட்டம், கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரிகிறார். இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 15 பேர், மோப்பநாய் சிமி உதவியுடன் அந்தத் தோட்டத்தில் சோதனை நடத்தினர். அங்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். அவற்றை திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பான கட்டிடத்தில் வைத்து பூட்டியுள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஆரோக்கியசாமியிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: