×

3 ஆயிரம் கோயில்களை நிர்வகிப்பதில் சிக்கல் சென்னை மண்டலம் இரண்டாக பிரிப்பு: கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து அறநிலையத்துறையில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை ஒரே ஒரு மண்டல இணை ஆணையர் நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மண்டலத்தை இரண்டாக பிரிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னை மண்டலம் இணை ஆணையர் -1ன் கீழ் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், அயனாவரம் ஆகிய 8 வருவாய் வட்டங்களும், சென்னை மண்டல இணை ஆணையர்-2ன் கீழ் மயிலாப்பூர், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 7 வருவாய் வட்டங்களாக பிரித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.

சென்னை மண்டலம்-1ல் இணை ஆணையர் ஹரிப்பிரியா தொடர்ந்து பணியாற்றுவார். காஞ்சிபுரம் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ரேணுகா தேவிக்கு இணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டார். இணை ஆணையர் ரேணுகா தேவியை சென்னை மண்டலம் 2 இணை ஆணையராக நியமனம் செய்து கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையர் ஜெயாவை காஞ்சிபுரம் உதவி ஆணையராக கூடுதல் பொறுப்பு நியமனம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Commissioner ,Chennai Zone ,two , Problem in managing 3,000 temples Chennai zone divided into two: Commissioner's order
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...