×

தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு தேவை குழந்தைகளுக்கு பாலூட்ட மறுக்கும் கொரோனா பாதித்த பெண்கள்: நோய் தொற்றும் என்று உறவினர்கள் அச்சம்

பெங்களூரு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ெகாடுக்கச்செய்வது மருத்துவர்களுக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது. மேலும் பிறந்த குழந்தைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் அதனை தவிர்ப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  9 மாதங்கள் கடந்தும் கொரோனாவில் இருந்து மீளமுடியவில்லை. தொற்றினால் பலதரப்பட்ட மக்களும் பலவிதமான பாதிப்பை சந்தித்துவருகின்றனர். இதில் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.  குழந்தைகள் தாய்ப்பால் இன்றி நோய் வாய் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல கொரோனா பாதித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 216 குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தும் பெற்றோர்கள் தர மறுத்துள்ளனர். நாங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க உறவினர்களை உதவிக்கு அனுப்பிகிறோம் இருப்பினும் உறவினர்கள் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் தாயின் அருகிலேயே குழந்தைகளை கொண்டு செல்வதில்லை என வாணிவிலாஸ் மருத்துவர் கீதா சிவமூர்த்தி தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவர்கள் கூறுகையில், இத்தாலியில் கொரோனா தொற்று பாதித்தி தாய்மார்கள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையை தாயின் அருகிலேயே பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் கொடுக்கச்செய்துள்ளனர். இந்த ஆய்வு வெற்றியை கண்டுள்ளது. தொடர்ந்து மார்ச்  மற்றும் மே மாதங்களில் தொற்று நோய் உச்சத்தில் இருந்தபோது 61 பெண்களுக்கு  62  குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்த ஆய்வின் படி குழந்தைகள் தாயின் அருகிலேயே பாதுகாப்பான முறையில் இருந்துள்ளது. மேலும் தாய்ப்பால் கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பாரோவிங் மற்றும் லேடி கர்ஜோன் மருத்துவமனை கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்பிணிக்களுக்கான பிரவச மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அப்போது கொரோனா பாதித்த தாய்மார்களுக்கு அவர்களின் குழந்தையின் நலனில் அக்கறை இருந்தால் தாய்ப்பால் கொடுக்கும் படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இதையடுத்து தாய்மார்கள் மற்றும்  அவர்களின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளித்தனர். இதைத்தொடந்து அங்கு சுமார் 300 குழந்தைகள் பிறந்தது.

அவை அனைத்துமே தாயுடன் இருந்தது. 300 குழந்தைகளில் 6 குழந்தைகள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. மற்ற அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மகப்பேறு மருத்துவர் சிஎன் ரெட்டி தெரிவித்தார். இதே போன்று மகப்பேறு மருத்துவர் ஹேமா கூறுகையில், தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் குழந்தையை கொரோனாவில் இருந்து காக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். நோயாளிகள் இதனை உணரவேண்டும். இல்லை என்றால் குழந்தைகள் நோய்  எதிரப்பு சக்தி இல்லாமல் பல்வேறு பாதிப்புகள்  நேரிடும் என்றார். தொடர்ந்து தாய்மார்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : women ,Corona ,Relatives , Awareness of the need for breastfeeding Corona-infected women who refuse to breastfeed their babies: Relatives fear infection
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது