×

தங்கவயல் அம்பேத்கர் நகரில் மினி விதானசவுதா: நில ஆய்வு தொடங்கியது

தங்கவயல்: தங்கவயலில் அரசு அலுவலகங்கள் இயங்க மினி விதானசவுதா கட்டுவதற்கான வருவாய் துறை அதிகாரிகள் நில ஆய்வு பணியை அம்பேத்கார் நகரில் தொடங்கினர். தங்கவயலில் மினி விதானசவுதா கட்டிடம் கட்டுவதற்கு அரசு 10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மினி விதானசவுதா கட்டுவதற்கு தகுந்த நிலத்தை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.ரூபகலா சசிதரன் தலைமையில் அரசு அதிகாரிகள் தங்கவயலில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் இறுதியாக ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகரில் நீதி மன்றத்தின் அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மினி விதானசவுதா கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. தங்கவயல் தாலுகா அரசு அலுவலகங்கள் செயல்பட மினி விதானசவுதா கட்ட அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியும் கட்டுமான பணிக்கான நிர்வாக ரீதியிலான அனுமதியும் அரசு வழங்கிய நிலையில், கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதர் மாவட்ட பொது பணித்துறை முதன்மை பொறியாளர் சந்திர சேகரை சந்தித்தார்.

அவரிடம்  மினி விதானசவுதா கட்டுவதில் தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி, உடனே மினி விதானசவுதா கட்டிடம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் வருவாய் துறை ஆய்வாளர் சிங் தலைமையில் அம்பேத்கர் நகர் வந்த அரசு அதிகாரிகள் அங்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மூன்று ஏக்கர் பத்து குண்டா நிலத்தை அடையாளப்படுத்தி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை ஜே.சி.பி.இயந்திரம் மூலம் சுத்தம் செய்த அம்பேத்கர் வார்டு கவுன்சிலர் கோதண்டன் கூறும்போது, தங்கவயல் மினி விதானசவுதா கட்டிடம் அம்பேத்கர் வார்டில் அமைவது குறித்து பெருமையாக உள்ளது. இங்கு இடம் தேர்வு செய்தது மட்டுமின்றி இதே அம்பேத்கர் வார்டில்  55 லட்சம் செலவில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ள தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதருக்கு வார்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.


Tags : Thangavayal Ambedkar Nagar , Mini Vidanasauda in Thangavayal Ambedkar Nagar: Land survey started
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில்...