நாட்டில் லவ்ஜிகாத் சட்டம் அமலுக்கு வரவேண்டும்: அமைச்சர் பிசி பாட்டீல் வலியுறுத்தல்

பெங்களூரு: நாட்டில் லவ்ஜிஹாத் சட்டம் அமலுக்கு வர வேண்டும். அதே போல் மாநிலத்திலும் இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தியுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேலவை கூட்டத்தொடரில் நடைபெற்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. மேலவையை ரத்து செய்வது பெரிய விஷயம் கிடையாது.  மேலவை கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் காங்கிரஸ் வரலாறு, ரவுடிசத்தை காட்டியுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை துணை தலைவரை இழுத்து தள்ளியதன் மூலம் அந்த பதவிக்கு கவுரவம் குறைந்துள்ளது. இதனால் இது தொடர்பாக மஜத, பா.ஜ. கட்சிகள் சார்பாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கு பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அது பிரதமரின் பெரிய மனிதாபிமானம். அரசியலில் எதிரிகளாக இருந்தாலும், நல்லது, கெட்டதில் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வது பா.ஜவின் வரலாறு.  நாட்டில் லவ்ஜிஹாத் சட்டம் அமலுக்கு வர வேண்டும். அதே போல் மாநிலத்திலும் இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தியுள்ளது என்றார்.

Related Stories:

>